Unrevealed Secrets of Nenjam Marapathillai

நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் முதல் முதலாக யார் நடிக்க வேண்டி இருந்தது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Unrevealed Secrets of Nenjam Marapathillai : தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் செல்வராகவன். காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் செவன் ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம், என்ஜிகே உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி இருந்தார்.

மேலும் இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. நீண்ட நாளாக கிடப்பில் இருந்து ரிலீசான இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா நாயகனாக நடித்திருந்தார். இத்திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வெற்றிபெற்றது.

ஆனால் இந்த படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது எஸ் ஜே சூர்யா இல்லை. தனுஷ் தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது. சில காரணங்களால் தான் அவரால் இல்லை படத்தில் நடிக்க முடியாமல் போனதாக தகவல் கிடைத்துள்ளது.

இதே போல் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான இரண்டாம் உலகம் திரைப்படத்திலும் தனுஷ் தான் நடிக்க இருந்தார். அந்தப்படத்திலும் அவரால் நடிக்க முடியாமல் போக ஆர்யா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.