Unni Krishnan Namboothari Passed away

கமல் படம் நடிகரான உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்துள்ளார்.

Unni Krishnan Namboothari Passed away : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவருடன் வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் இணைந்து நடித்தவர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி.

இவர் தனது 73வது வயதில் தான் நடிப்பை தொடங்கி 18 வருடம் மலையாளிகளை சிரிக்க வைத்தவர்.

இவருக்கு சமீபத்தில் உடல் நலக் குறைபாடு ஏற்பட்டு கொரானா உறுதி செய்யப் பட்டிருந்த நிலையில் முழுவதுமாக குணமாகிவிட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் மீண்டும் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டு காலமானார் இந்த செய்தியை கேட்டு திரையுலக பிரபலங்கள் இவருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.