Unna Ninaichu
சைக்கோ படத்தில் இருந்து உன்ன நினைச்சு என்ற பாடல் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்போது அரசியலில் ஈடுபட்டு வந்தாலும் சினிமாவை விட்டு விடாமல் தொடர்ந்து நடித்து வருகிறார்.

மிஸ்கின் இயக்கத்தில் இவர் சைக்கோ என்ற படத்தில் நடித்து வருகிறார். டிசம்பர் 27-ம் தேதி திரைக்கு வர உள்ள இந்த படத்தில் இருந்து தற்போது உன்ன நினைச்சி என்ற பாடல் வரிகள் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

உதயநிதியும் மிஷ்கினும் முதல் முறையாக இணைந்திருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.