Unlock 3.O in India
Unlock 3.O in India

மூன்றாம் கட்ட ஊரடங்கு தளர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.

Unlock 3.O in India : இந்தியாவின் கொரானா வைரஸ் பரவல் அதி தீவிரமாக பரவி வருவதால் கடந்த மார்ச் மாதம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

இந்த ஊரடங்கில் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மூன்றாம் கட்ட தளர்வுகள் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

திறக்கப்படுகிறது தியேட்டர்கள்.. மாஸ்டர், டாக்டர், அண்ணாத்தே போன்ற படங்கள் எப்போது ரிலீஸ்?

அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:

➤நாடு தழுவிய அளவில் அமலில் உள்ள ஊரடங்கில் தளர்வுகளை அளித்து மத்திய அரசு அறிவிப்பு

➤யோகா, ஜிம் பயிற்சி மையங்களை ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் திறக்க அனுமதி

➤தனிநபர்கள் இரவு நேரங்களில் நடமாட விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

➤கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்

➤பள்ளி, கல்லூரிகள் திறப்புக்கான தடை தொடரும், அதில் எந்த மாற்றமும் இல்லை என மத்திய அரசு அறிவிப்பு

➤ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.

➤மெட்ரோ ரயில், தியேட்டர்கள், கேளிக்கை பூங்காக்கள் போன்றவை இயங்குவதற்கு தடை தொடர்கிறது.

➤நீச்சல் குளங்கள், மதுபான பார்களை திறப்பதற்கான தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

➤மத நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்வுகள், பொது நிகழ்ச்சிகளுக்கு தடை நீடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது‌.