வாலி படத்தில் நடிக்க இருந்தது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

Unknown Secrets of Vaali : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் வாலி.

இத்திரைப்படத்தினை எஸ் ஜே சூர்யா இயக்கி இருந்தார். இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக சிம்ரன் மற்றும் ஜோதிகா ஆகியோர் நடித்தனர். ஆனால் முதலில் இந்த படத்தில் சிம்ரன் நடிக்க வேண்டியது இல்லை. பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த கிரண் என்பவரை தான் படக்குழு அணுகியுள்ளது.

அவர் இந்த படத்தில் நிராகரிக்க அதன்பிறகு மீனாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. மீனாவும் தயக்கம் காட்டியதால் இறுதியில் இந்த வாய்ப்பு சிம்ரனுக்கு வந்துள்ளது. அதேபோல் ஜோதிகாவுக்கு பதிலாகவும் நடிக்க மீனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஜோதிகா கதாபாத்திரத்தில் அவர் நடிக்க மறுத்துள்ளார் என தெரியவந்துள்ளது.