Unknown Secrets of Thalapathy Movie

தளபதி படத்தில் முதன்முதலாக நடிக்க இருந்தவர் யார் என்பது குறித்த தகவல் பல வருடங்களுக்குப் பிறகு வெளியாகியுள்ளது.

Unknown Secrets of Thalapathy Movie : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மம்முட்டி மற்றும் அரவிந்த்சாமி ஆகியோர் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தளபதி.

இந்த படத்தில் அரவிந்த்சாமி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தம்பியாகவும் கலெக்டராகவும் நடித்திருப்பார். ஆனால் முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது நடிகர் ஜெயராம் தானாம்.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், அரவிந்த்சாமி புகைப்படத்தை காண்பித்து கலெக்டர் வேடத்திற்கு இவர் சரியாக இருப்பார் என கூறியதால் மணிரத்னம் அரவிந்த்சாமியை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.

இத்தனை வருடங்களுக்குப் பிறகு தற்போது இந்த படம் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.