Unknown Secrets of Master Release

மாஸ்டர் படம் OTT-யில் ரிலீஸ் ஆகாமல் போக தளபதி விஜய் தான் காரணம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

Unknown Secrets of Master Release : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் இந்த வருடம் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகி இருக்க வேண்டியது. கொரானா வைரஸ் தொற்று மற்றும் திரையரங்குகள் மூடப்பட்டதன் காரணமாக படம் ரிலீஸ் தள்ளிப்போனது.

திரையரங்குகள் திறக்கப்பட்டும் இன்னும் மக்கள் மனதில் ஒரு பயம் போகாததால் தியேட்டருக்கு கூட்டம் பெரிய அளவில் வரவில்லை என்பதால் படத்தை ரிலீஸ் செய்யாமல் படக்குழு இருந்து வருகின்றனர்.

வரும் பொங்கல் விருந்தாக இப்படம் வெளியாகும் என கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இப்படத்தை OTT-யில் வெளியிட முயற்சிகள் நடந்தும் இதுவரை வெளியாகாதது ஏன் என்பது தெரியவந்துள்ளது.

அதற்கு காரணம் தளபதி விஜய் தானாம். தன்னுடைய உறவினர் விட்டு அவர்கள் இந்த படத்தை தயாரித்து இருப்பதால் சம்பளம் பற்றி எல்லாம் பெரியதாக யோசிக்கவல்லை என கூறப்படுகிறது.

இதுவே கார்ப்பரேட் நிறுவனத்தின் ஏதாவது இந்த படத்தை தயாரித்து இருந்திருந்தால் பட்ஜெட்டில் பாதி விஜயின் சம்பளமே சென்றிருக்கும் என்பதால் இந்நேரம் படம் OTT-யில் ரிலீஸ் ஆகியிருக்கும் கோலிவுட் வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.

மேலும் விஜய் சினிமாவை தூக்கி நிறுத்துவது அனைத்து நடிகர்களின் கடமை என எண்ணுபவர். அதன் காரணமாகவே திரைப்பட உரிமையாளர்கள் நலனைக் கருத்தில் கொண்டே இந்த படத்தினை திரையரங்குகளில் தான் வெளியிட வேண்டும் என உறுதியாக இருப்பதாக தெரியவந்துள்ளது