Unknown Secrets of Kadhalan Movie
Unknown Secrets of Kadhalan Movie

முதலில் காதலன் படத்தில் நடிக்க இருந்தது பிரபுதேவா மற்றும் நக்மா இல்லை என பிரபல இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Unknown Secrets of Kadhalan Movie : தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ஜென்டில்மேன். இந்த படத்தை தொடர்ந்து காதலன் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

படத்தில் பிரபுதேவா மற்றும் நக்மா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

தற்போது இப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய வசந்தபாலன் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் காதலன் படத்தில் முதன்முதலாக நடிக்க இருந்தது பிரசாந்த் மற்றும் பாலிவுட் நடிகையான மாதுரி தீக்ஷித் தான்.

சங்கர் தான் பிரபுதேவா தான் நடிக்க வேண்டும் என அடம் பிடித்து அவரை நடிக்க வைத்தார். கால்ஷீட் பிரச்சனையால் மாதுரி விலகிக் கொள்ள நக்மா நடித்தார் என கூறியுள்ளார்.

இது போதுமே.. வெறித்தனம் கூடுது – மாநாடு குறித்த மாஸான அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பாளர்!

மேலும் இந்த படத்திற்கு முதல் வாரத்தில் சுத்தமாக வரவேற்பு இல்லை. இரண்டாவது வாரத்தில் தான் நல்ல வரவேற்பு கிடைத்தது அதன் மூலம் தான் படம் வெற்றி பெற்றது என தெரிவித்துள்ளார்.

அப்போதைய கால கட்டத்தில் பிரஷாந்த் மற்றும் மாதுரி தீக்ஷித் நடித்திருந்தால் நிச்சயம் இப்படம் இன்னும் வேற லெவலில் இருந்து இருக்கும் என்பதே ரசிகர்களின் கருத்தாக இருந்து வருகிறது.

ஏனென்றால் அப்போது இருவருக்கும் ரசிகர்களிடையே மிகப்பெரிய கிரேஸ் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.