Unknown Secrets of Jeans Movie
Unknown Secrets of Jeans Movie

ஜீன்ஸ் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Unknown Secrets of Jeans Movie : தமிழ் சினிமாவில் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் பிரஷாந்த் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ஜீன்ஸ்.

இந்த படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்து இருந்தார். இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார்.

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான இப்படம் பிரசாத்தின் திரைப்பயணத்தில் மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

மத்திய அரசிடமிருந்து OBC இட ஒதுக்கீட்டை போராடிப் பெற்றுக் கொடுத்த தமிழக அரசு!

ஆனால் இப்படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது தல அஜித் தான். இப்படம் உருவாக இருந்த சமயத்தில் அஜித் பெப்சி அமைப்புக்கு ஆதரவாக இருந்ததால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போயுள்ளது.

அஜித்திற்கு அடுத்ததாக இந்த படத்தின் வாய்ப்பு டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவாவுக்கு சென்றுள்ளது. அவராலும் இந்த படத்தில் நடிக்க முடியாமல் சென்றுள்ளது.

இதனையடுத்து தான் இப்படத்தின் வாய்ப்பு பிரசாந்த்துக்கு சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த தகவலை அறிந்த அஜித் ரசிகர்கள் இப்படி ஒரு வாய்ப்பை தல மிஸ் பண்ணிட்டாரே என வருத்தப்பட்டு வருகின்றனர்.