Bombay Movie Update

மாபெரும் வெற்றிபெற்ற பம்பாய் திரைப்படத்தில் இருந்து விக்ரம் விலகியதற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது.

Unknown Secrets of Bombay Movie : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான மணிரத்னம் இயக்கத்தில் 1992ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பம்பாய். இந்த படத்தில் ஹீரோவாக அரவிந்த்சாமி நடிக்க நாயகியாக மனிஷா கொய்ராலா நடித்து இருந்தார்.

இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. முதலில் இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் தான் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். அதன் பின்னர் அவர் இந்த படத்தில் இருந்து விலகி கொண்டதற்கான காரணம் என்ன என்பது தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது விக்ரம் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த சமயத்தில் அவர் புதிய மன்னர்கள் என்ற படத்தில் நடித்து வந்துள்ளார். அந்த படத்திற்காக தாடி வளர்த்து வந்த விக்ரம் பம்பாய் படத்திற்காக அதை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார். இதனால் வேறு வழியில்லாமல் அவர் பம்பாய் படத்திலிருந்து விலகிக் கொண்டுள்ளார்.