Unknown Secrets of Aadukalam

ஆடுகளம் படத்திலிருந்து த்ரிஷா வெளியேறுவதற்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

Unknown Secrets of Aadukalam : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று ஆடுகளம். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக டாப்சி நடித்திருப்பார். டாப்சீ தமிழில் அறிமுகமான திரைப்படமும் ஆடுகளம் தான். நான் முதலில் இந்தப் படத்தில் நடிக்க இருந்தது நடிகை த்ரிஷா தான்.

இந்த படத்தில் கமிட்டாகி அவர் நான்கைந்து நாட்கள் ஷூட்டிங் கூட சென்றுள்ளார். அதன் பின்னர் பிரியதர்ஷன் இயக்கத்தில் ஹிந்தி படமொன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. பாலிவுட் பட வாய்ப்பு என்பதால் ஆடுகளம் பட ஷூட்டிங்கிற்கு வராமல் தட்டி கழித்துள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த படக்குழு திரிஷாவை நீக்கி விட்டு டாப்ஸியை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

தேசிய விருது பெற்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிட்டோமே என திரிஷா தற்போதும் புலம்பி வருகிறாராம்.. ஆனால் இப்போ புலம்பி என்ன பயன்??

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.