காஷ்மீர் நில விவகாரம்

காஷ்மீர் நில விவகாரம் குறித்து எதிர்கட்சியினர் வெளியிட்டுள்ள வீடியோ சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி, தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்த காணொளியில்,இந்திய வரைபடத்தின் அனைத்து பாகங்களும் ஒரு நிறத்திலும், பாகிஸ்தான் மற்றும் சீனா ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் ஒரு நிறத்திலும் வெளிப்படையாக காண்பிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. இளைஞரணி செயலாளர் வெளியிட்டுள்ள காணொளியானது, நாட்டின் ஒருமைப்பாட்டையும் மாண்பையும் அழிக்கும் வண்ணம் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது தேசதுரோக செயல் என பலரும் கூறி வருகின்றனர்.

காஷ்மீரில் அன்றாடம் பாடுபட்டு நம் நாட்டை காத்து வரும் முன்கள ராணுவ வீரர்களான நம் சகோதரர்களையும் காஷ்மீருக்காக உயிர் விட்ட அமரர்களின் புகழையும் தி.மு.க. வெளிப்படையாக இந்த காணொளி மூலம் அவமதித்துள்ளது என குற்றம் சாட்டி வருகின்றனர்.

திமுகவுடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கச்சத்தீவை தாரைவார்த்ததைப் போல காஷ்மீரை பாகிஸ்தானுக்கும் சீனாவிற்கும் தாரைவார்க்க சொல்கிறதா திமுக என சமூக வலைதளங்களில் கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன.

மேலும் உதயநிதி ஸ்டாலினின் இந்தச் செயல் மூலம் உள்ளூர் அரசியலே தெரியாத உதயநிதி ஸ்டாலின் சுதந்திரம் தொட்டு நாட்டின் முக்கியமான விஷயங்களை தவறாக சித்தரித்து மாட்டிக்கொள்வது தி.மு.க. வின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என அரசியல் ஆர்வலர்கள் கூறத் தொடங்கியுள்ளனர்.