இரண்டாவது நாளாக உதயநிதி ஸ்டாலின் கைது - கொரானா விதிகளை மீறி பிரச்சாரம்.!! | Udhayanidhi Stalin

Udhayanidhi Stalin Arrest Again : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை அறிந்து சரியான நேரத்தில் அனைத்தையும் செயல்படுத்தி வருகிறார்.

எதிர்க்கட்சியாக செயல்பட்டு வரும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் நாளைக்கு ஒரு அறிக்கை வெளியிட்டு ஆளும் அதிகாரத்தை குறை கூறி வருகிறார். அவரைப்போலவே திமுகவின் இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை தொடர்ந்து ஆளும் கட்சியை மோசமாக விமர்சனம் செய்து வருகிறார்.

அந்த வகையில் நாகை மாவட்டம் அக்கரைப்பட்டி மீன்பிடி துறைமுகத்தில் முறைப்படி அனுமதி வாங்காமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு திமுகவின் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இரண்டாவது நாளாக கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவிட் விதிமுறைகளை மீறி , உடன் நூற்றுக்கணக்கானோரை அழைத்துக் கொண்டு துறைமுகம் சென்று, பிரச்சாரம் என்ற பெயரில் உள்ளே சென்று படகில் எல்லாம் ஏற முயற்சித்துள்ளார் உதய், மேலும் அங்குள்ள மீனவர்களுக்கும் திமுகவினர் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதனால் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். தினமும் பத்திரிகைகளில் நம்மைப் பற்றிய செய்திகள் வர வேண்டும் என்ற நோக்கத்தில் இப்படியான செயல்களில் ஈடுபட்டு வருவதாக சமூக வளையதளங்களில் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.