Udhayanidhi Stalin About Psycho Movie
சைக்கோ படத்தில் நடித்த அனுபவத்தை பற்றிய உதயநிதி ஸ்டாலின் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

Udhayanidhi Stalin About Psycho : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மிஸ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சைக்கோ. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். அதிதி ராவ் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தை பற்றி பிரபல நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள உதயநிதி ஸ்டாலின், அந்த பேட்டியில் இது முழுக்க முழுக்க மிஷ்கினின் படம். நான் இயக்குனர்களிடம் முழுமையாக என்னை ஒப்படைத்து விடுவேன்.

போச்சா… ஓவர் ஒல்லியானதால் கீர்த்தி சுரேஷுக்கு வந்த சோதனை.!

மனிதன் படத்திற்கு பிறகு நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். இந்த படத்தில் நான் பார்வையற்றவனாக நடித்துள்ளேன், இந்தியில் ஒரு படத்தில் இதே போன்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் லென்ஸ் ஒன்றை அணிந்திருப்பார்.

அந்த லென்ஸை தேடி பிடித்து வாங்கி அதனை அணிந்து கொண்டு எடுத்து கொண்ட வீடியோவை மிஷ்கினுக்கு அனுப்பினேன். ஆனால் அவர் சூப்பர் என சொல்லிட்டு கண்ணாடி மட்டும் போட்டா போதும் என சொல்லிட்டார்.

இருந்தாலும் நான் அவருக்கே தெரியாமல் சில காட்சிகளில் இந்த லென்ஸை போட்டு கொண்டு நடித்துளேன் என கூறியுள்ளார். இது நாயகனுக்கு சைக்கோ கொலையாளிக்கும் இடையே நடக்கும் கதை தான் என கூறியுள்ளார்.

இப்படம் உலகம் முழுவதும் வரும் ஜனவரி 24-ம் தேதி ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.