TSK Hindi Dubbing Movie Record

சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக தானா சேர்ந்த கூட்டம் இந்தி டப்பிங் படம் சாதனை படைத்துள்ளது.

TSK Hindi Dubbing Movie Record : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. ஆனால் இவருக்கு கடந்த சில வருடங்களாக பெரிய அளவில் வெற்றி என்பது அமையவில்லை.

தானா சேர்ந்த கூட்டம், என்ஜிகே போன்ற படங்களில் சூர்யாவின் நடிப்பு பாராட்டப்பட்டாலும் படம் பெரிய அளவிற்கு வெற்றி பெறவில்லை.

இந்தநிலையில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியுள்ளது. ஒட்டு மொத்த இந்திய சினிமாவும் இத்திரைப்படத்தை கொண்டாடி வருகிறது.

இந்த நிலையில் தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இத்திரைப்படம் இந்தியில் வெளியாகி ஒரு வருடம் ஆகி விட்ட நிலையில் தற்போது 40 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. தமிழில் சுமாரான வரவேற்பை பெற்ற திரைப்படம் ஹிந்தியில் இவ்வளவு பார்வையாளர்களை பெற்றிருப்பது சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

YouTube video