த்ரிஷா ஓபன் டாக்

எனக்கு விஜய்யை பிடிக்கவே பிடிக்காது என திரிஷா பேட்டி ஒன்றில் கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. பல்வேறு நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் தற்போது கதாநாயகி மையமாகக் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் தொடர்ந்து அடுத்தடுத்து படங்கள் உருவாகி வருகின்றன. திரிஷாவின் திரைப் பயணத்தில் முக்கியமான படங்கள் என்றால் விஜய்யுடன் இணைந்து நடித்த திரைப்படங்கள் தான் எனக் கூறலாம்.

அதிலும் குறிப்பாக கில்லி உள்ளிட்ட திரைப்படங்கள் திரிஷாவின் திரைப் பயணத்தில் முக்கியமான படங்களாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படி இருந்தும் பேட்டி ஒன்றில் தனக்கு விஜய்யை பிடிக்காது அஜித்தை தான் ரொம்ப பிடிக்கும் என தெரிவித்துள்ளார் திரிஷா. இவர் இப்படி கூறியதற்கான காரணம் அப்போதைய காலகட்டத்தில் விஜய்க்கும் த்ரிஷாவுக்கும் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது தான் காரணம் என கூறப்படுகிறது.