Top Hero's in Tamil Cinema Without Any Support
Top Hero's in Tamil Cinema Without Any Support

சினிமா பின்புலம் ஏதுமில்லாமல் திரையுலகில் சாதித்துக் காட்டிய தமிழ் ஹீரோக்கள் யார் யார் என்பதை பார்க்கலாம் வாங்க.

Top Hero’s in Tamil Cinema Without Any Support : தமிழ்த் திரையுலகில் முன்னணி ஹீரோக்களாக பல நடிகர்கள் இருந்து வருகின்றனர்.

ஆனால் இவர்களில் சிலர் எவ்வித சினிமா பின்புலமும் இல்லாமல் திரையுலகில் அறிமுகமாகி தங்களது உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் உச்சத்தை அடைந்துள்ளனர்.

அப்படி சினிமா பின்புலம் இல்லாமல் அறிமுகமாகி இன்று டாப் ஹீரோக்களுக்கு கலக்கும் பிரபலங்கள் யார் யார் என்பதை பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் ரூபாய் 200 கோடி வசூலைக் கொடுத்த ஹீரோக்கள் இவர்கள் தான் – அஜித் ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய லிஸ்ட்.!

  1. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் சாதாரண நடத்துனராக இருந்து கே பாலச்சந்தர் அவர்களின் மூலமாக சினிமாவில் அறிமுகமாகி உலகம் அறியும் நபராக நின்று விளங்கி வருகிறார்.

  1. தல அஜித்

ரஜினியைப் போலவே இவருக்கும் சினிமாவில் எந்த வித பின்புலமும் இல்லை. மெக்கானிக் வேலை செய்து வந்த அதே மாடலில் துறையின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் விளம்பர படங்களில் நடித்து அதன் பின்னர் ஹீரோவாக அறிமுகமாகி இன்று உச்சம் அடைந்து உள்ளார்.

  1. சந்தானம்

ஏகப்பட்ட குறும் படங்களில் நடித்திருந்தாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். எந்தவொரு பின்புலமும் யாருடைய உதவியும் இல்லாமல் சினிமாவில் சாதித்து காட்டியுள்ளார்.

  1. விஜய் சேதுபதி

ஸ்டண்ட் மாஸ்டர் ஆக வேண்டும் என்ற ஆசையில் திரையுலகில் நுழைந்து கடுமையான உழைப்புக்குப் பிறகு இன்று ஹீரோவாக சாதித்து வருகிறார். வருடத்திற்கு அரை டஜன் படம் கொடுக்கும் ஒரே ஹீரோவாக இருந்து வருகிறார்.

  1. சிவகார்த்திகேயன்

விஜய் டிவியில் சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தன்னுடைய பயணத்தை தொடங்கி அதன் பின்னர் தொகுப்பாளர், காமெடி நடிகர் என பல நிலைகளை தாண்டி இன்று முன்னணி நாயகனாக வலம் வருகிறார்.

இவர்களைப் போல இன்னும் பல நடிகர்கள் சினிமா பின்புலம் இல்லாமல் அறிமுகமாகிய தங்களது நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களும் ஒருநாள் முன்னணி நடிகர்கள் ஆகும் போது சரித்திரத்தில் இடம் பிடிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.