Top 5 Movies – 200 Crores BOX OFFICE

YouTube video

Soorarai Potru Release Date : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக சூரரைப்போற்று என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இறுதிச்சுற்று படத்தை இயக்கிய பெண் இயக்குனர் சுதா கொங்கரா இப்படத்தை இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைக்க அபர்ணா பாலமுரளி நாயகியாக நடித்துள்ளார்.

படத்தின் பாடல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அதேபோல் இந்த படத்தின் போஸ்டர்கள், டீஸர் உள்ளிட்டவைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

மேலும் இந்த திரைப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போவதாக சில தினங்களுக்கு முன்னர் நடிகர் சூர்யா அறிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து நேற்று அக்டோபர் 26 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் சூரரைப் போற்று டிரைலர் வெளியாகும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது சூரரைப் போற்று படத்தை தீபாவளி விருந்தாக நவம்பர் 12ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு படத்தின் டிரெய்லரில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அறிவிப்புக்காக சூர்யா ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.