Top 5 Liked Video in South Indian Cinema
Top 5 Liked Video in South Indian Cinema

தென்னிந்திய சினிமாவில் அதிக லைக்குகள் பெற்ற டாப்-5 யூடியூப் வீடியோக்கள் என்னென்ன என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம்.

Top 5 Liked Video in South Indian Cinema : தென்னிந்திய சினிமாவில் ஒவ்வொரு வருடமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன. பட ரிலீசுக்கு முன்னர் அதன் டீசர், டிரைலர், பாடல்கள் உள்ளிட்டவை யூ டியூப் வழியாக வெளியாவது வழக்கம்.

அந்த வகையில் இதுவரை யூடியூபில் வெளியாகி உள்ள பாடல்கள் டீஸர்கள் டிரைலர்கள் உள்ளிட்டவைகளில் அதிக லைக்குகள் பெற்ற டாப் 5 வீடியோக்கள் என்னென்ன என்பது குறித்த விவரங்கள் தெரிய வந்துள்ளன.

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக கருதப்படும் தளபதி விஜய்க்கு முதல் இடம் கிடைக்கவில்லை என்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியான ஒன்றாக இருக்கிறது.

தனுஷ் நடிப்பில் வெளியான படங்களில் இடம்பெறும் பாடல்களில் அடுத்தடுத்து முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன.

தென்னிந்திய சினிமாவின் வசூல் வேட்டையாடிய டாப் 10 படங்கள், முதலிடத்தில் யார்? எவ்வளவு வசூல் தெரியுமா? அதிரவைக்கும் லிஸ்ட்!

அடுத்ததாக தெலுங்கு சினிமா நாயகன் அல்லு அர்ஜுனின் புட்ட பொம்மா பாடல் இடம் பிடித்துள்ளது.

நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்திலேயே தளபதி விஜய்யின் பாடல்கள் இடம் பிடித்துள்ளன. இதோ அந்த லிஸ்ட்

1 ரௌடி பேபி – 3.6 மில்லியன் லைக்குகள்

2 Why This Kolaveri Di – 2.5 மில்லியன் லைக்குகள்

3 Butta Bomma – 2.4 மில்லியன் லைக்குகள்

4 பிகில் ட்ரைலர் – 2.3 மில்லியன் லைக்குகள்

5 குட்டி ஸ்டோரி – 1.7 மில்லியன் லைக்குகள்