தமிழகத்தில் உள்ள சுங்கசாவடிகளில் திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Toll free price hike in highways shocking – இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் 400க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. அதில் தமிழகத்தில் மட்டும் 40 சுங்கச்சாவடிகள் இயங்குகின்றன.

மூங்கில் அரிசி உணவின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோமா?

இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை கட்டண விதி 2008ன் படி சென்னை விக்கிரவாண்டி சுங்கச்சாவடி, புதூர், பாண்டியபுரம், வீரசோழபுரம், விஜயமங்கலம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள 15 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி ரூ. 5 முதல் ரூ.15 வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பல தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், சமூக வலைத்தளங்களில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீம்ஸ்களும் வலம் வருகிறது.

https://platform.twitter.com/widgets.js