Today Ipl Match :
Today Ipl Match :

Today Ipl Match : டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் சூப்பர் ஓவரில் தோல்வியை சந்தித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி , இன்று சொந்த ஊரில் பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 26வது லீக் போட்டி இன்று கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.

கடந்த போட்டியில் பெங்களூர் அணியை வீழ்த்திய மகிழ்ச்சியில் டெல்லியும் உற்சாகமாகக் களம் இறங்க உள்ளது.

கொல்கத்தா தனது முந்தைய போட்டியில் சென்னையிடம் போராடி தோற்றது. இந்த நிலையில், மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பும் முனைப்புடன் கொல்கத்தா அணியும் முயற்சி செய்யும்.

இரு அணிகளும் இதுவரை தலா 6 போட்டிகளில் விளையாடி உள்ளன. கொல்கத்தா 4 போட்டிகளில் வென்று 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 2ம் இடத்தில் இருக்கிறது. டெல்லி அணி 3 போட்டிகளில் வென்று 6வது இடத்தில் உள்ளது.

மார்ச் 30ம் தேதி டெல்லியில் நடந்த போட்டி சமனானதை அடுத்து (கொல்கத்தா 20 ஓவரில் 185/8; டெல்லி 20 ஓவரில் 185/6), சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்டதில் டெல்லி அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்த தோல்விக்கு உள்ளூரில் பதிலடி கொடுக்க கொல்கத்தா தீவிரமாக இருக்கிறது.

இந்த அணியின் ஆந்த்ரே ரஸ்ஸல் அதிரடியாக மட்டுமின்றி சூழ்நிலைக்கேற்ப பொறுமையாகவும் விளையாடி அசத்துகிறார்.

சுனில் நரைன், கிறிஸ் லின், ராபின் உத்தப்பா, கேப்டன் தினேஷ் கார்த்திக், பியூஷ் சாவ்லா என பலரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

அதே நேரத்தில் டெல்லி அணியிலும் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பன்ட், பிரித்வி ஷா என பேட்டிங் வரிசை வலுவாகவே உள்ளது.

தொடக்க வீரர் ஷிகர் தவான் பார்மில் இல்லாதது மட்டுமே ஒரே குறை. ரபாடா, மோரிஸ், அமித் மிஸ்ரா ஆகியோர் பந்துவீச்சில் அசத்தி வருகின்றனர்.

சூப்பர் ஓவர் தோல்விக்கு கொல்கத்தா அணி பழி வாங்குமா, இல்லை டெல்லி அணி வெற்றியை தொடருமா என்பது இன்று தெரிய வரும்

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.