tnstc sleeper bus
tnstc sleeper bus

tnstc sleeper bus – சென்னை: ரூ.133 கோடி மதிப்பீட்டில் 500 புதிய அரசு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.இதனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் துவக்கி வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய 500 அரசு பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த பேருந்தில் பல சிறப்பு வசதிகள் செய்துள்ளனர். பேருந்தில் நகரும் வசதியுள்ள இருக்கைகள், மேலும் இருக்கைகளில் கைபேசி சார்ஜ் வசதியும் உள்ளன.

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து புதிதாக இயக்கப்படும் இந்த குளிர்சாதன பேருந்துகளில் இன்று ஒருநாள் மட்டும் வேலூர், திருவண்ணாமலை போன்ற இடங்களுக்கு இலவசமாக பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இதற்கு முன்னர், சென்னையில் இருந்து மதுரை, ஈரோடு, சேலம், போடிநாயக்கனூர், கரூர், கோவை ஆகிய 6 நகரங்களுக்கு,

கழிவறை, சிசிடிவி கேமரா, படுக்கை வசதியுடன் கூடிய ஏசி பேருந்துகள் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், இந்த புதிய குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளில் கட்டண விபரம் எவ்வளவு? என்பதை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.