YouTube video

TN Govt New Plan launched : முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 17 மாவட்டங்களில் 247.90 கோடி செலவில் நடைபெற உள்ள பொதுப்பணித் துறையின் பல்வேறு திட்டங்களுக்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

இந்த திட்டங்கள் கோயம்புத்தூர், கடலூர், திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திருநெல்வேலி, திருப்பூர், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளன.

இந்த திட்டங்களில் தடுப்பு அணைகள் மற்றும் ஆற்றங்கரையில் பல்வேறு கட்டுமானங்கள் மற்றும் புதிய நீர்நிலைகளை உருவாக்குதல் ஆகியவை அடங்கும். மேலும் மொத்தம் ரூபாய் 12.57 கோடி செலவில் வணிக வரித் துறைக்காக பல இடங்களில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்.

இனி T20 கிரிக்கெட் தான் எதிர்காலம் – அன்றே சொன்ன தல அஜித்..!

அதுமட்டுமல்லாமல் உர்ஸ் திருவிழா என்று அழைக்கப்படும் வருடாந்திர கந்தூரி திருவிழாவிற்காக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர் தர்காவின் நிர்வாகிகளுக்கு 20 கிலோ சந்தன கட்டைகளை இலவசமாக வழங்குவதற்கான ஆணையை நாகூர் தர்காவின் நிர்வாகிகளிடம் வழங்கினார்.

நாகபட்டினம் மாவட்டத்தில் சூஃபி துறவி ஹஸ்ரத் சையத் ஷாஹுல் ஹமீத்தின் ( Sufi saint Hazrat Syed Shahul Hameed ) கல்லறைக்கு மேல் கட்டப்பட்ட நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் காந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு சந்தனம் பூசும் விழாவில் இந்த சந்தனக் கட்டைகள் பயன்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.