TN Government Conditions on Theaters Opening
TN Government Conditions on Theaters Opening

செப்டம்பர் முதல் தியேட்டர்கள் திறக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

TN Government Conditions on Theaters Opening : கொரானா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் தற்போது தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக புதிய படங்கள் எதுவும் ரிலீஸ் செய்ய முடியாமல் இருந்து வருகிறது. சிறிய பட்ஜெட் படங்கள் மட்டும் ஓடிடி வழியாக வெளியிடப்பட்டு வருகிறது.

தியேட்டர் உரிமையாளர்கள் தமிழக அரசு தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் தமிழக அரசு சொல்லும் அத்தனை வழிமுறைகளையும் பின்பற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம் என கூறி வருகின்றது.

இந்த நிலையில் தற்போது செப்டம்பர் மாதம் முதல் தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்படலாம் என தகவல்கள் கிடைத்துள்ளன.

அவ்வாறு திறக்கப்படும்போது என்னென்ன விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பது குறித்து சில தகவல்களும் வெளியாகியுள்ளன.

ஆடிய ஆட்டத்துக்கு பதிலடி.. மீரா மிதுனுக்கு விஜய் ரசிகர்கள் அடித்த கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

அதாவது 40 சதவீத சீட்டுகள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும்.

ஒரு நாளைக்கு மூன்று காட்சிகள் மட்டுமே அனுமதி ‌ஒவ்வொரு காட்சிக்கும் இடையில் ஒன்றரை மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும். அதற்குள் அனைத்து இருக்கைகளும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படவேண்டும்.

ஆன்லைன் வழியாக மட்டுமே டிக்கெட் முன்பதிவு பார்வையாளர்களில் உடல் வெப்ப நிலையை பரிசோதித்த பின்னரே படம் பார்க்க அனுமதிக்க வேண்டும்.

அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயம்.

இதுபோன்ற நடவடிக்கைகள் கடுமையாக பின்பற்றப்படும் எனவும் கூறப்பட்டு வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழக அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.