கொட்டும் மழையில் செம்பரம்பாக்கம் ஏரியை பார்வையிட்ட தமிழக முதல்வர் பழனிசாமி.!! | Nivar Cyclone | News

TN CM Visit in Chembarambakkam : தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் மகாபலிபுரம் மற்றும் புதுச்சேரி இடையே இன்று நள்ளிரவு கரையைக் கடக்க தொடங்குகிறது.

இதனால் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது.பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையில் குடிநீர் ஏரிகளில் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது.

Nivar Cyclone Camp in Tamilnadu

இதனால் இன்று மதியம் 12 மணியளவில் விநாடிக்கு ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் அடையாறு ஆற்றை ஒட்டியுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி நீர் திறந்து விடப்பட்டதையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.