TN CM About Amma Mini Clinic

2000 அம்மா கிளினிக்குகள் வரும் டிசம்பர் 31-க்குள் தமிழகம் முழுவதும் திறக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

TN CM About Amma Mini Clinic : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சிறப்பான ஆட்சி வழங்கி வருகிறார். தமிழக மக்களின் தேவை அறிந்து அதனை பூர்த்தி செய்வதில் தமிழகம் முன்னலையில் இருந்து வருகிறது.

அந்நிய முதலீடுகளை ஈர்ப்பது ஆதாரத்தை பெருக்குவது என தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை இயற்றுவதில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு தொடர்ந்து செவ்வனே செயல்பட்டு வருகிறது.

அந்தவகையில் ஏழைமக்கள் சாதாரண சளி, ஜுரம் என்றால் கூட அருகிலுள்ள கிளினிக்குக்கு சென்றால் ஒரு நாளைக்கு ரூபாய் 200 வரை செலவாகும். அந்தத் தலைப்பை கூட குறைக்கும் நோக்கில நோக்கில் தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக்குகள் திறக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

அதன் முதற்கட்டமாக சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்வர் நூற்றுக்கும் மேற்பட்ட மினி கிளீனிக்குகளை திறந்து வைத்தார்.

இப்படியான நிலையில் வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் 2000 மினி கிளினிக்குகள் திறக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

மேலும் மெரினா கடற்கரையில் உள்ள தமிழக முதல்வர் புரட்சித் தலைவி செல்வி ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தை விரைவில் திறக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் இந்த நினைவிடத்தின் கட்டுமான பணிகளை கவனிக்க பொதுப்பணித்துறையில் ஓய்வு பெற்ற அதிகாரி பாண்டியராஜை நியமித்தும் உத்தரவிட்டார்.