Thupparivaalan 2 Director Update
Thupparivaalan 2 Director Update

துப்பறிவாளன் 2 படம் பற்றிய முக்கிய தகவல்கள் விஷால் தரப்பில் இருந்து வெளியாகியுள்ளன.

Thupparivaalan 2 Director Update : தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் தற்போது துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகம், சக்ரா ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை மிஷ்கின் இயக்கி வந்த நிலையில் அவருக்கும் விஷாலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

மிஸ்கின் படத்தின் பட்ஜெட்டை பொறுத்து விடுவதாகவும் அதிகமாக செலவு செய்வதாகவும் தயாரிப்பாளரும் நடிகருமான விஷால் குற்றம்சாட்டி அவரை இந்த படத்தில் இருந்து விலக்கினார்.

மங்காத்தா படத்தை பார்த்துவிட்டு விஜய் கொடுத்த வாக்கும், விருந்தும் – முதன்முறையாக உண்மையை உடைத்த வெங்கட் பிரபு – அப்போ ரசிகர்களுக்கு மாஸ் ட்ரீட் இருக்கு!

துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை தானே இயக்க இருப்பதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் விஷால் பழசை மறந்து மீண்டும் மிஷ்கினுடன் கூட்டணி அமைக்க இருப்பதாகவும் இதனால் துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை மிஸ்கின் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து தற்போது விஷால் தரப்பில் வெளியாகியுள்ள தகவல் என்னவென்றால் பழசை மறந்து மிஷ்கினுடன் கூட்டணி அமைப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. அதற்கு சாத்தியமும் இல்லை என கூறியுள்ளார்.

இதனால் துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை திரைப்படத்தை மிஸ்கின் இயக்கப் போவதிலலை என்பது உறுதியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து விஷால் தான் இயக்க உள்ளார் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.