Thuppakki 2

Thuppakki 2 : இருக்கு இந்த படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயம் இருக்கு என முருகதாஸ் நிகழ்ச்சி ஒன்றில் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டு கொண்டாட வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். இவரை வைத்து முருகதாஸ் இயக்கி இருந்த படங்களில் ஒன்று துப்பாக்கி.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.

இந்நிலையில் முருகதாஸ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா? என்ற கேள்வி எழுப்பி இருந்தனர். \

அதற்கு முருகதாஸ் நிச்சயம் உருவாகும் என கூறி அரங்கத்தை அதிர வைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ஒரு மீம்ஸ் விஜய் சார் கூட நான் படம் பண்ணறதுதான் உங்களுக்கு பிரச்சனைன்னா … இன்னும் 10 படம் கூட பண்ணுவேன் டா… ஸ்டைலா .. கெத்தா…’ என்ற வசனம் அதில் இருந்தன.

இது குறித்து முருகதாஸ் இது என்னுடைய மைண்ட் வாய்ஸ் மாதிரியே இருக்கே என கூறி அனைவரையும் சிரிக்க வைத்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.