Thuglaq_Durbar

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார் திரைப்படம் நேரடியாக OTT வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Thughlag Darbar in OTT Release : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் பல திரைப்படங்கள் ரிலீசுக்கு தயார் நிலையில் காத்துக்கொண்டிருக்கின்றன.

இந்த படங்களில் ஒன்றுதான் துக்ளக் தர்பார். இந்த படத்தினை அறிமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் என்பவர் இயக்கியுள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

தற்போது திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி எனவும் இரவு நேரக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இந்தப் படம் நேரடியாக OTT-யில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

துக்ளக் தர்பார் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றி உள்ளது. சன்டிவி நிறுவனத்திடமே OTT இணையதளம் இருந்தும் இந்த படம் ஹாட்ஸ்டார் வழியாக வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய்சேதுபதி டபுள் ஆக்சன் ஹீரோவாக நடித்துள்ள இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராசி கண்ணா, மஞ்சிமா மோகன் மற்றும் காயத்ரி என மூன்று நாயகிகள் நடித்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.