Thottu Vidum Thooram Review
அறிமுக இயக்குனர் வி.பி நாகாஸ்வரன் இயக்கத்தில் விவேக் ராஜ், மோனிகா சின்னகொட்லா, நடிகை சீதா, சிங்கம் புலி மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் தொட்டு விடும் தூரம்.

படத்தின் கதைக்களம் :

சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பயின்று வரும் மோனிகா NSS கேம்ப்ரிக்காக கிராமத்திற்கு செல்கிறார், அந்த கிராமத்தில் சமூக சேவை செய்து வரும் இளைஞரான விவேக் ராஜுடன் காதலில் விழுகிறார்.

காதலுடன் கேம்ப் முடிந்து சென்னை திரும்புகிறார், பின்னர் விவேக் ராஜ் தன்னுடைய காதலியை தேடி சென்னை கிளப்புகிறார். இதனையடுத்து இவர்களின் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடக்கிறது? இறுதியில் சேர்ந்தார்களா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை.

படத்தை பற்றிய அலசல் :

விவேக் ராஜ் கிராமத்து இளைஞராக அழகாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார், சண்டை காட்சிகளில் முன்னணி நடிகர்களுக்கே சவால் விடுகிறார். காதல் காட்சிகளில் அசத்தியுள்ளார்.

மோனிகா சென்னை கேர்ளாக சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். பாடல்களில் தாராளம் காட்டி நடித்துள்ளார்.

நடிகை சீதா எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்துயுள்ளார், சிங்கம் புலி உள்ளிட்ட நடிகர்கள் அவர்களின் வேலையை அழகாக செய்து கொடுத்துள்ளனர்.

தொழில்நுட்பம் :

இசை :

நோவாவின் இசை சூப்பர்.. பாடல்கள் சுமார் ரகம்.

ஒளிப்பதிவு :

கே. ராம்குமாரின் கேமரா திருநெல்வேலி பகுதியை அழகாக காட்டியுள்ளது.

இயக்கம் :

அறிமுக இயக்குனரின் படமா இது? என நம்மை வியக்க வைக்கிறார் நாகேஸ்வரன். அந்த அளவிற்கு படத்தை நேர்த்தியான முறையில் கொண்டு சென்றுள்ளார். பார்வையாளர்களை இவர்கள் சேருவார்களா? மாட்டார்களா? என்ற எதிர்பார்புடனேயே கொண்டு சென்றிருப்பது சிறப்பு.

மொத்தத்தில் தொட்டு விடும் தூரம் மக்களின் மனதை தொடும்.