சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிம்புவின் ஒஸ்தி 2 திரைப்படம் உருவாக உள்ளதாக பரவிய தகவலுக்கு அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழ் சினிமாவில் தரணி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் ஒஸ்தி. இப்படம் ரசிக்கும்படியாக இருந்தாலும் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும் இதனை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் ஒன்று பரவியது.
இது குறித்து சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பாளர் தியாகராஜன் நாங்கள் ஒஸ்தி 2 படத்தை தயாரிக்கவில்லை. நாங்கள் தயாரிக்க இருப்பதாக பரவிய தகவல் உண்மை இல்லை என கூறியுள்ளது.