ThervaiKandikai Lake Details

76 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் புதிய நீர்த்தேக்கம் ஒன்றை உருவாக்க இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ThervaiKandikai Lake Details : சென்னை, சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் முன்னிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதிய நீர்த்தேக்கத்தை திறந்து வைத்தார்.

சென்னை மாவட்டத்தின் குடிநீர் தேவைக்காக தமிழக அரசு தனது நடவடிக்கைகளால், திருவள்ளூரில் உள்ள பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரி மற்றும் கடலூரில் வீராணம் ஏரி ஆகியவற்றை பயன்பட்டிற்கு கொண்டுவந்துள்ளது.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் கண்ணன் கோட்டை மற்றும் தேர்வாய்கண்டிகை கிராமங்களில் உள்ள இரண்டு ஏரிகளை இணைத்து புதிதாக கண்டிகை நீர்த்தேக்கம் பொதுமக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

அம்மா ஜெயலலிதாவின் கனவுத்திட்டமான இந்த அணையானது, 2013ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 380 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. 1485 ஏக்கர் பரப்பளவில் உருவாகியுள்ள இந்த ஏரியில் 500 மில்லியன் கன அடி நீரை சேமிக்க முடியும். ஆந்திர மாநிலத்தில் இருந்து பெறப்படும் கிருஷ்ணா நதி நீர், கண்டலேறு – பூண்டி கால்வாயிலிருந்து 8.60 கிலோ மீட்டர் நீளத்திற்கு இணைப்புக் கால்வாய் அமைத்து இங்கு கொண்டு வரப்படும்.

இதனால் சென்னையின் குடிநீர் பயன்பாட்டிற்கு தினமும் 65 மில்லியன் லீட்டர் நீர் வழங்கப்படும். மேலும்,நீர்த்தேக்க சுற்றுப்பகுதிகளில் உள்ள, 700 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு, பாசன வசதி கிடைக்கும். இதற்காக, ஐந்து மதகுகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. சுற்றுப் பகுதிகளின் சாகுபடி மட்டுமின்றி, நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும், இந்த நீர்த்தேக்கம் வழிவகை செய்யும்.

சென்னையின் குடிநீர் பயன்பாட்டிற்காக கடைசியாக 1944-ஆம் ஆண்டு பூண்டியில் சத்யமூர்த்தி நீர் தேக்கம் உருவாக்கப்பட்டிருந்த நிலையில், 76 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் நீரளவை தளத்தின் மேல் பகுதியில் இருந்து, நீர்த்தேக்கத்தின் முழு அழகையும் கண்டு ரசிக்கும் வகையில், ‘வியூ பாயின்ட்’ ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் நீர்த்தேக்கத்திற்கு அருகிலேயே நீர் ஓட்டத்தை கண்காணிக்கும் வகையில் 1,000 சதுர அடியில் ஆய்வு மாளிகை கட்டப்பட்டு உள்ளது. இங்கு, நீர்த்தேக்கத்தை பராமரிக்கும் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் தங்க அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

சென்னை மக்களின் குடிநீர் பிரச்சினையை போக்க 76 ஆண்டுகளுக்கு பிறகு புதிய நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டிருப்பது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.