Theethum Nandrum Movie Team Interview

YouTube video

Shakeela Daughter With Aswin : மலையாள சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷகிலா. தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இவர் நாயகியாக வலம் வர வேண்டும் என்ற ஆசையில் தான் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். ஆனால் இவருடைய நேரம் இவருடைய ட்ராக்கை முற்றிலுமாக மாற்றிவிட்டது. இதனால் ஷகிலாவின் மீதான ரசிகர்களின் பார்வையும் மாறியது. மலையாள மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் இவர் நடித்து வந்தார். தற்போது இவர் விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சி மூலமாக ஷகிலாவின் மீதான பார்வை ரசிகர்கள் மத்தியில் மாறியுள்ளது. ரசிகர்கள் அவரை அம்மா என அழைக்கத் தொடங்கியுள்ளனர்.

இவர் ஒரு திருநங்கை பெண்ணை தன்னுடைய மகளாக ஏற்றுக் கொண்டு அவரை வளர்த்து வருகிறார் என்பது சமீபத்தில் தான் தெரிய வந்தது. இந்த நிலையில் தற்போது ஷகிலாவின் மகள் குக் வித் கோமாளி அஸ்வினுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ பாருங்க