Theepetti Ganeshan Passes Away

இளம் நடிகரான தீப்பெட்டி கணேசன் உடல்நலக் குறைபாடு காரணமாக உயிரிழந்தது திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Theepatti Ganeshan Passes Away : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் எக்கச்சக்கமான நடிகர் நடிகைகள் அறிமுகமாகி கொண்டு தான் இருக்கிறார்கள். ரேணிகுண்டா, தென்மேற்கு பருவக்காற்று, பில்லா 2, கண்ணே கலைமானே, கோலமாவு கோகிலா என பல படங்களில் நடித்தவர் தீப்பெட்டி கணேசன்.

இளம் நடிகரான இவர் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபலங்கள் பலரும் இவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்‌.