Theatres Owner Comments on New Movie Release

மாஸ்டர் ரிலீஸ்க்கு பிறகு திரையரங்க உரிமையாளர்கள் மீண்டும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Theatres Owner Comments on New Movie Release : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான மாஸ்டர் என்ற திரைப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.

கொரானா காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்கிற்கு மீண்டும் கூட்டத்தை வர வைத்த படமாக மாஸ்டர் அமைந்தது.

50% இருக்கை அனுமதியுடன் இந்த படம் வெளியாகி இருந்தாலும் வசூலில் செம மாஸ் காட்டியது. இந்த படத்தை தொடர்ந்து இதுவரை கிட்டதட்ட 10 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி விட்டது.

இந்த நிலையில் திரையரங்க உரிமையாளர்கள் மாஸ்டர் படத்திற்கு வந்த கூட்டத்தை போல மற்ற படங்களுக்கு கூட்டம் வரவில்லை என புலம்பி வருகின்றனர். படத்தினை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் விளம்பரங்கள் செய்யப்படவில்லை என்றும் கூறி வருகின்றனர்.