Theatres likely to reopen from 1 August
Theatres likely to reopen from 1 August

நாடு முழுவதும் 25 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டரை திறக்க மத்திய அரசு அனுமதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Theatres likely to reopen from 1 August : இந்தியாவில் தற்போது குரானா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வருகிறது. ஒரே நாளில் கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இது ஒருபுறம் இருந்தாலும் ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்போது மூன்றாம் கட்ட ஊரடங்கு தளர்வில் 25 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் ஆகியவைகள் இயங்கலாம் என அனுமதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனால் மாஸ்டர், டாக்டர், அண்ணாத்த, ஜகமே தந்திரம் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

2020-ல் எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் வெளியாகப் போகும் பெரிய பட்ஜெட் தமிழ் திரைப்படங்கள் – இதுல நீங்க எதுக்கு வெயிட்டிங்?

ஆனால் 25 சதவீத பார்வையாளர்களுடன் படத்தை ரிலீஸ் செய்தால் லாபம் எடுப்பது என்பது மிகவும் சிரமமான ஒன்றாகவே இருக்கும்.

இதனால் முற்றிலும் இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னரே பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகையால் தமிழ் சினிமாவைப் பொருத்தவரை பெரிய பட்ஜெட் படங்கள் இந்த வருடம் தியேட்டரில் ரிலீஸ் ஆவது என்பது சந்தேகத்திற்குரிய ஒரு விஷயமாகவே பார்க்கப்பட்டு வருகிறது.

இயல்புநிலை திரும்பினால் மட்டுமே மாஸ்டர் திரைப்படத்தை தீபாவளி ரிலீசுக்கு எதிர்பார்க்க முடியும் எனவும் கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

மலேசியா, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா உள்ளிட்ட சில நாடுகளில் மட்டும் தியேட்டர்கள் திறக்கப்பட்டு மெர்சல், பிகில் உள்ளிட்ட திரைப்படங்கள் ரி-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.