Theatres Closes in Maharashtra

ஏப்ரல் 30ஆம் தேதி வரை திரையரங்குகள் மூடப்படுவதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.

Theatres Closes in Maharashtra : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகள் அனைத்திலும் அதி தீவிரமாக பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. முதல் அலை வேகமாக பரவி ஓரளவிற்கு குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அதிதீவிரமாக பரவ தொடங்கியுள்ளது.

இந்தியாவில் நாளொன்றுக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் வரை பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது. இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில் தான் கொரானா அதிகமாக பரவ தொடங்கியுள்ளது.

இதனால் அம்மாநில அரசு ஊரடங்கு களில் கட்டுப்பாடுகளை கடுமையாக வருகிறது. இந்த நிலையில் வரும் ஏப்ரல் 30ஆம் தேதிவரை மகாராஷ்டிரா மாநிலத்தில் திரையரங்குகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்திலும் பொருளாதாரங்கள் தீவிரமடைந்து வருவதால் தேர்தல் முடிந்த பிறகு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் திரையரங்குகள் மூடப்படும் என கூறப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.