The shiny ISRO leader | Koppillil Radhakrishnan | Koppillil Radhakrishnan (born 29 August 1949) is an Indian space scientist who headed the Indian Space
The shiny ISRO leader

பெங்களூர்: இஸ்ரோ சார்பில் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய ‘சந்திரயான்-2’ விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது.

The shiny ISRO leader – ‘ சந்திராயன் 2’ விண்கல திட்டத்தின் முக்கிய மற்றும் சவாலான நிகழ்வு இன்று (சனிக்கிழமை) அதிகாலையில் நடந்தது.

இந்நிலையில் சந்திரயான்-2 விண்கலத்தின் ‘விக்ரம் லேண்டர் ‘ நிலவை நெருங்கிய நிலையில் அதிலிருந்து சிக்னல் கட் ஆகிவிட்டது. அதில் இருந்து வரும் சிக்னலுக்காக விஞ்ஞானிகள் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதனால் நாடே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில், “லேண்டரில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு சிக்னல் எதுவும் கிடைக்கவில்லை.

நிலவிற்கு 2.1 கிலோ மிட்டர் தொலைவில் இருந்தபோது விக்ரம் லேண்டரில் இருந்து தகவல் துண்டிக்கப்பட்டது” என்று கூறினார்.

மேலும் நேற்று பெங்களூர் இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகளுடனும், மாணவர்களுடனும் கலந்துரையாடிய மோடி, இன்று காலை எட்டு மணிக்கு மீண்டும் இஸ்ரோ மையத்திற்கு வந்து விஞ்ஞானிகள் மத்தியில் உரை நிகழ்த்தினார்.

அப்போது இஸ்ரோ விஞ்ஞானிகளின் இமைப்பொழுதும் சோர்ந்துபோகாத ஈடு இணையற்ற உழைப்புக்கு தலைவணங்குவதாக மோடி தெரிவித்தார்.

மேலும் இடையூறுகளால் இலக்குகளில் இருந்து விலக மாட்டோம் என்று உறுதியளித்த மோடி விஞ்ஞானத்தில் தோல்வி என்பதே கிடையாது. முயற்சி செய்துகொண்டே இருக்க வேண்டும் என்றார்.

இஸ்ரோவின் விண்வெளி திட்டங்கள், அதன் சாதனைகளை பாராட்டிய மோடி விஞ்ஞானிகளின் குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவித்தார்.

மேலும் நமது விஞ்ஞானிகளை எண்ணி நாடே பெருமைப்படுவதாகவும், இஸ்ரோவின் எதிர்கால திட்டங்களுக்கு நாடும் அரசும் துணை நிற்கும் என்றும் மோடி உறுதியளித்தார்.

இப்போதும் கூட ஆர்பிட்டர் நிலவை வெற்றிகரமாக சுற்றி வருகிறது என்று கூறிய மோடி இஸ்ரோ விஞ்ஞானிகள் மீதான முழு நம்பிக்கையை வெளியிட்டு எதிர்கால திட்டங்களுக்காக வாழ்த்து கூறினார். பின்னர் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்து அவர் புறப்பட்டார்.

அப்போது, பிரதமர் அருகே நின்றிருந்த இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் விட்டு அழுகையில், அவரை கட்டியணைத்த பிரதமர் மோடி தட்டிக் கொடுத்து தேற்றினார்.