The Great Indian Kitchen Tamil Remake

கோலாகலமாக துவங்கியிருக்கிறது “தி கிரேட் இந்தியன் கிச்சன்” தமிழ் பதிப்பு

The Great Indian Kitchen Tamil Remake : மலையாள மொழியில் வெளியாகி இந்தியாவெங்கும் அதிர்வலைகளை கிளப்பிய, “தி கிரேட் இந்தியன் கிச்சன்” படம், இயக்குநர் R.கண்ணன் இயக்கத்தில் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ராகுல் ரவிச்சந்திரன் நடிக்க தமிழில் உருவாகிறது. இயக்குநர் R.கண்ணன் அவர்களே தனது மசாலா பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்க இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்து வருகிறது. படத்தினை ஒரே கட்டமாக படமாக்ககியுள்ளார்கள்.

கனா, கா பெ ரணசிங்கம், என தரமான வெற்றிபடங்களில் அழுத்தமான கதாப்பாத்திரம் செய்து பாராட்டுக்கள் குவித்து வரும் ஐஷ்வர்யா ராஜேஷ் இப்படத்தின் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார்.

படம் குறித்து நாயகி ஐஷ்வர்யா ராஜேஷ் கூறியதாவது…

பொதுவாக ஒரு படத்தை ரீமேக் செய்வது என்பது மிகக்கடினம். படத்தின் அடிப்படை ஆத்மாவை அப்படியே கொண்டு வருவது என்பது முடியாத காரியம் அதனால் நான் நிறைய ரீமேக் நடிக்க மறுத்திருக்கிறேன். ஆனால் இந்தப்படம் என்னை தேடி வந்த போது கண்டிப்பாக செய்ய வேண்டும் என நினைத்தேன். இன்றைய சமூகத்திற்கு மிகவும் தேவையான கருத்து இப்படத்தில் இருக்கிறது. நான் கா பெ ரண்சிங்கம் படத்தில் நடித்துகொண்டிருந்தபோது ஒரு சிறு பெண்ணை சந்தித்தேன் அவளக்கு எதுவும் சொல்லாமலேயே சிறு வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டிருந்தது. இன்றும் பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் பழக்கம் நம் சமூகத்தில் இல்லை. கிராமம் நகரம் என அனைத்து இடங்களிலும் கண்டிப்பாக இப்படம் பார்க்கப்பட வேண்டும். இயக்குநர் R.கண்ணன் அவர்களுடன் எனக்கு முதல் படம் மிகச் சிறந்த இயக்குநர், அருமையான படக்குழு படப்பிடிப்பு அனுபவம் அற்புதமாக இருக்கிறது படமும் மிகச்சிறப்பாக வரும் என்றார்.

இயக்குநர் R.கண்ணன் படம் குறித்து கூறியதாவது….

நம் கலாச்சாரத்தில் பெண்கள் வாழ்வின் பெரும்பகுதியை சமையலறை ஆக்கிரமித்துள்ளது. இன்றைய நவநாகரீக உலகிலும் பெண்களின் அடிப்படை உணர்வுகளுக்கு எந்த மதிப்பும் இருப்பதில்லை. இதையெல்லாம் முகத்தில் அறைந்தாற்போல், அருமையாக சொல்லியிருந்தது “தி கிரேட் இந்தியன் கிச்சன்” படம். பலர் இப்படத்தை தமிழில் இயக்க முயன்றார்கள் தரமான படங்களை இயக்கியிருந்ததால் என்னை நோக்கி இப்படம் வந்தது. நகரங்களில் ஆர்டர் செய்து சாப்பிடும் ஃபாஸ்ட்புட் கலாச்சாரம் வளர்ந்திருக்கிறது ஆனால் கிராமங்களில் பெண்கள் எந்நேரமும் சமையலறையில் தான் இருக்கிறார்கள் அதனால் தான் கதை காரைக்குடியில் நடப்பதாக அமைத்தேன். ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் காரைக்குடியை சேர்ந்தவர் என்பதால் படப்பிடிப்பு மிக எளிமையாக இருக்கிறது. படத்தின் ஆன்மா கெடாமல் சமூகத்திற்கு தேவையானதை சொல்வதே குறிக்கோள் என்றார்.

இயக்குநர் R.கண்ணன் இப்படத்தினை இயக்குவதுடன் Masala Pix நிறுவனத்தின் சார்பில் M.K.R.P நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.