Thalapathy’s Master Pre- Release Mass Collection in USA

YouTube video

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், வர்ஷா பொல்லம்மா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Master Pre- Release Collection in USA

இந்த படம் உலகம் முழுவதும் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாக உள்ளது. ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அமெரிக்காவில் இப்படம் வெளியாவதற்கு முன்பாகவே முன்பதிவில் ரூபாய் 50 லட்சத்துக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இந்த தகவல் ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.