தளபதி 66 பட இயக்குனர் யார் என்பது குறித்து தகவல் ஒன்று கசிந்துள்ளது.

Thalapathy66 With Unexpected Combo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவரது நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகிவரும் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். முதற்கட்ட படப்பிடிப்புகள் ஜார்ஜியாவில் நடந்து முடிந்தன. ஜூலை மாதத்தில் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

மேலும் தளபதி 66 படத்தின் இயக்குனர் யார் என்பது பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்து வரும் நிலையில் தற்போது அதுகுறித்த தகவல் ஒன்று அமைந்துள்ளது. இதுவரை தளபதி 66 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது புதிய இயக்குனரின் பெயர் அடிபடத் தொடங்கியுள்ளது.

அதாவது தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனரான வம்சி தளபதி விஜய்க்கு கதை ஒன்றைக் கூற அது விஜய்க்கும் பிடித்துள்ளதாம். இதனால் விஜய்யின் அடுத்த படத்தை வம்சி இயக்க தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜூ இந்த படத்தை தயாரிக்க இருக்கிறார் என தகவல் கசிந்துள்ளது.

ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை? தெலுங்கு இயக்குனர் கதையில் விஜய் நடிப்பது ஒர்க் அவுட் ஆகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.