Thalapathy66 Movie Director Details

மாஸ்டர் பட வெற்றியை அடுத்து தளபதி 66 படத்தில் விஜயுடன் மீண்டும் இணைந்து இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Thalapathy66 Movie Director Details : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாநகரம், கைதி படங்களை அடுத்து விஐய் நடிப்பில் வெளிவந்த “மாஸ்டர்” கொரானா அச்சுறுத்தல் காரணமாக திரைக்கு தாமதமாகி ஜனவரி 13ஆம் தேதி பொங்கல் அன்று பல தடைகளை தாண்டி திரையரங்குகளில் வெளிவந்தது. இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் மற்றும் சாந்தனு, ஆண்ட்ரியா,கௌரி, சஞ்சீவ், ஸ்ரீமன், ரம்யா, பிரிகிதா, பூவையார் உள்ளிட்டோர் பலர் நடித்துள்ளனர். மாஸ்டர் படம் உலக அளவில் வெளியாகி 250 கோடி வசூல் சாதனையை படைத்துள்ளது.

அடுத்ததாக கமல் நடிப்பில் உருவாகும் விக்ரம் படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இப்படம் குறித்த அறிவிப்பு கடந்த நவம்பர் மாதம் வெளியானது. தற்போது கமல் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளதால் தேர்தல் முடிந்து படத்தின் சூட்டிங் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் பல ஆண்டுகளாக நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்த நெல்சன் கோலமாவு கோகிலா படத்தினை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இந்த படத்தினை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தினை இயக்கி வருகிறார். டாக்டர் படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஏ.ஆர். முருக தாஸூக்கும் மற்றும் சன் பிக்சர்ஸ்க்கும் கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்த படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகினார். இந்த படத்தினை இயக்கும் வாய்ப்பு தற்போது நெல்சனுக்கு கிடைத்துள்ளது. ஏப்ரல் மாதம் இந்த படத்தின் சூட்டிங் தொடங்க உள்ளது.

இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகர் பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார் எனவும் 50 நாள் கால்ஷீட்டில் இந்த படத்தில் நடிக்க 3.5 கோடி சம்பளம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. தளபதி 65 படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட படத்தில் வில்லனாக நடித்த நவாசுதீன் சித்திக் தளபதி 66 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தினை தேனாண்டாள் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கிறது. அறிவு மணி மற்றும் அன்பு மணி ஸ்டண்ட் மாஸ்டராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுவரை எந்த அறிவிப்பும் வாராத நிலையில் தற்போது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியினை வெளியிட்டு உள்ளார்கள். தளபதி 66 படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இதனை குறித்து சித்ரா லட்சுமணன் வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். மாஸ்டர் வெற்றியை அடுத்து மீண்டும் லோகேஷ் கனகராஜ் விஜய் கூட்டணிக்கு ரசிகர்கள் பலரும் காத்து கொண்டுள்ளனர். தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க உள்ளதாகவும் அனிருத் இசை அமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.