Vijay

தளபதி 65 படத்தின் கதை மற்றும் விஜயின் ரோல் என்ன என்பது குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Thalapathy65 Story and Vijay Character : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். தளபதி விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க விஜய் சேதுபதி மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகியோர் வில்லனாக நடித்து இருந்தனர். அதுமட்டுமில்லாமல் சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், கௌரி கிஷன், விஜே ரம்யா, மகேந்திரன் என பல திரையுலக பிரபலங்கள் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தனர்.

இத்திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக கோலமாவு கோகிலா டாக்டர் என இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ள நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 65 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தத் திரைப்படத்திற்கும் அனிருத் தான் இசை அமைக்க உள்ளார். தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இந்த படத்திற்காக அவருக்கு ரூபாய் 3.5 கோடி சம்பளம் கொடுக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்திருந்தன. இந்த நிலையில் தற்போது தளபதி 65 படத்தில் விஜய் இன்டர்நேஷனல் ஏஜென்ட்டாக அதாவது ஜேம்ஸ்பாண்ட் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படம் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக உருவாக இருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கும் என கூறப்பட்டு வருகிறது. தற்போது படத்திற்கான லொகேஷனை தேடும் பணிகளுக்காக நெல்சன் திலிப் குமார் ரஷ்யா சென்றுள்ளார். அங்கே லொகேஷன் தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இது குறித்து சில புகைப்படங்களையும் அவர் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் தளபதி 65 திரைப்படத்திற்கும் நெல்சன் இயக்கியுள்ள சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்திற்காகவும் மிகுந்த ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.