Thalapathy Vijay's Aunty in Pandian Stores

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முக்கிய வேடத்தில் தளபதி விஜய்யின் சித்தி நடித்து வருவது தற்போது தெரியவந்துள்ளது.

Thalapathy Vijay’s Aunty in Pandian Stores : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டுக் குடும்பத்தின் பெருமையை பேசி வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலுக்கு என உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது எனக் கூறலாம்.

தமிழில் கிடைத்த வரவேற்பு காரணமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் இந்தியிலும் இந்த சீரியல் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது.

தமிழில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முக்கிய வேடமான அம்மா வேடத்தில் நடித்து வருபவர் ஷீலா.

இவர் வேறு யாருமில்லை இளம் நடிகர் விக்ராந்தின் அம்மா தான். அதாவது தளபதி விஜய்யின் சொந்த சித்தி. விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகரின் உடன்பிறந்த சகோதரி என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி தீயாக பரவ தளபதி விஜய்யின் சித்தியா இது இவ்வளவு நாளா இது தெரியாம போயிடுச்சே என பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.