Actor Thalapathy Vijay : நடிகர் விஜய் தன்னுடைய தீவிர ரசிகனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார், அந்த புகைப்படத்தை பிரபல நடிகரின் மனைவி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். இவருக்கு உலகம் முழுவதும் மிக பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. திரையுலக பிரபலங்களும் விஜய்க்கு ரசிகர்களாக உள்ளார்கள்.
அப்படி பிரபல நடிகரும் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் தலைவருமான நாசரின் மகன் பைசலும் விஜயின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் பைசல் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.
அப்போது தளபதி விஜய் எதிர்பாராத விதமாக நாசர் குடும்பத்திற்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
விஜய் தன்னுடைய மகனுக்கு வாழ்த்து கூறி கேக் கட் செய்து பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படங்களை நாசரின் மனைவி கமீலா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள் :
Happy birthday my dear son Faizal, today was your dream come true with Vijay Anna.. just couldn’t ask for more.. may Almighty bless you with good health and happiness.. pic.twitter.com/1LtxJrrm34
— Kameela (@nasser_kameela) December 1, 2018