Thalapathy Vijay Style From Thuppakki

துப்பாக்கி படம் முதல் மாஸ்டர் படம் வரை தளபதி விஜய் தொடர்ந்து ஒரே மாதிரியான ட்ரேட் மார்க்கை பயன்படுத்தியுள்ள ஆதாரத்தை விஜய் ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர்.

Thalapathy Vijay Style From Thuppakki : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படம் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாக உள்ளதால் ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் இப்படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தளபதி விஜய்க்கு புகைப்படம் இன்று மாஸ்டர் படத்திலிருந்து வெளியாகியுள்ளது. அந்த ஸ்டைலை அவர் துப்பாக்கி படத்தில் தொடங்கி கத்தி, சர்க்கார் ஆகிய படங்களில் தொடர்ச்சியாக பயன்படுத்தியிருப்பதை புகைப்படங்களை ஒன்றாக இணைத்து ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர்.

இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள ரசிகர் ஒருவர் இது தான் விஜய்யின் ட்ரேட்மார்க்கா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.