Thalapathy Vijay Reply to Transgender Jeeva

உங்களோட நடிக்கணும் என திருநங்கை ஒருவர் வைத்த கோரிக்கைக்கு விஜய் பதிலளித்துள்ளார்.

Thalapathy Vijay Reply to Transgender Jeeva : தமிழ் சினிமாவில் தற்போது திருநங்கைகளும் சாதிக்க தொடங்கி விட்டனர் என கூறலாம். அருவி, தர்மதுரை உள்ளிட்ட படங்களில் திருநங்கை நடித்திருந்தனர். அவர்களின் கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன.

தர்மதுரை படத்தில் நடித்திருந்த திருநங்கை ஜீவா ஒருமுறை முருகதாஸிடம் வாய்ப்பு கேட்டு சென்றுள்ளார். அதன் பிறகு தான் இவருக்கு தர்பார் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த படத்தில் நடித்த போது தளபதி விஜயை சந்தித்துள்ளார். அப்போது விஜய் நீங்கள் தர்மதுரை படத்தில் நடித்தீங்க தானே என கேட்டார், அது எனக்கு ரொம்ப பெருமையா இருந்துச்சி என ஜீவா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் நான் உங்களோடு இணைந்து நடிக்க வேண்டும் என கூறியதற்கு ஐ அம் வைட்டிங் என தெரிவித்ததாக கூறியுள்ளார். தளபதி விஜய் இவ்வாறு கூறியதாக ஜீவா பேசியது ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.