Thalapathy Vijay Rare Picture From Master

மாஸ்டர் படப்பிடிப்பில் சாதாரண மனிதராய் மூலையில் அமர்ந்து இருப்பது போல விஜய்யின் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

Thalapathy Vijay Rare Picture From Master : தமிழ் சினிமாவில் மாபெரும் ரசிகர் பட்டாளத்துடன் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்த இவர் அடுத்ததாக கைதி, மாநகரம் ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிவடைந்து படம் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தீபாவளி விருந்தாக டீசர் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

இந்த படத்தை பொங்கல் விருந்தாக வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது தளபதி விஜய் மாஸ்டர் படப்பிடிப்பில் சாதாரண மனிதரை போல மூலையில் ஒரு ஓரமாக அமர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள மனுசனா இது. இவ்வளவு சிம்பிளான மனுஷனா இருக்காரே என வியந்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்

https://twitter.com/GayuTweetz/status/1333378017918291968?s=19