Thalapathy Vijay Missed Bhagyaraj Movie
Thalapathy Vijay Missed Bhagyaraj Movie

17 வருடத்திற்குப் பின்னர் முக்கிய இயக்குனரின் படத்தை தளபதி விஜய் தவற விட்டு உள்ள சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.

Thalapathy Vijay Missed Bhagyaraj Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் தளபதி விஜய். அவரது நடிப்பில் இதுவரை பல திரைப்படங்கள் வெளியாகி உள்ளன.

அதேசமயம் விஜய்யும் பல திரைப்படங்களை தவறவிட்டு உள்ளார். அவர் தவற விட்ட திரைப்படங்கள் வேறொரு நடிகர்களின் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டடித்ததும் உண்டு. அப்படி தவறிப்போன கதைகள் சிங்கம், வேலு என பலவற்றை அடுக்கிக் கொண்டே செல்லலாம்‌.

இந்த வகையில் 17 வருடங்களுக்கு முன்னர் திரைக்கதையும் ஜாம்பவானான பாக்யராஜ் இயக்கத்தில் விஜய் ஒரு படத்தில் நடிக்க இருந்துள்ளார்.

என்ன பிக் பாஸ்… வனிதா வெளியே போனதும் கன்டென்ட் இல்லையா? – வெளியான ப்ரோமோவால் கடுப்பான ரசிகர்கள் – வீடியோ உள்ளே.!

பாக்யராஜ் இயக்கத்தில் விஜயகாந்த் மற்றும் சௌந்தர்யா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற சொக்கத்தங்கம் திரைப்படத்தை தொடர்ந்து இப்படம் உருவாக இருந்துள்ளது.

ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இப்படம் கைவிடப்பட்டு விட்டதாக பாக்கியராஜ் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மேலும் அக்கதை இன்றும் அப்படியே இருந்து வருவதாக தெரிவித்துள்ளார்.