Thalapathy Vijay Meet With Fans

மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் தளபதி விஜய் திடீர் சந்திப்பில் ஈடுபட்டு வருவது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Thalapathy Vijay Meet With Fans : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருக்கென உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.மேலும் தளபதி விஜய் சமீபகாலமாகவே தொடர்ந்து படங்களில் அரசியல் பேசி வருகிறார். அதுமட்டுமல்லாமல் அவர் விரைவில் அரசியலில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை மேலும் உறுதி செய்யும் விதமாக சமீபத்தில் இயக்குனரும் விஜயின் தந்தையுமான எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் விஜய் மக்கள் இயக்கம் தகுந்த சூழ்நிலை வரும்போது அரசியல் கட்சியாக மாறும் என தெரிவித்திருந்தார்.

அவர் இவ்வாறு கூறி சில நாட்களே கடந்த நிலையில் தற்போது Online-ல் தளபதி விஜய் மாவட்ட வாரியாக தன்னுடைய ரசிகர்களை சந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சட்டமன்றத் தேர்தலிலேயே தளபதி விஜய் அரசியலில் என்ட்ரி கொடுப்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதே சமயம் அதற்கு தற்போது வாய்ப்புகள் இல்லை. ஆனால் விஜய்யிடமிருந்து அரசியல் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

தளபதி விஜயின் இந்த திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் விரைவில் அரசியலுக்கு வரவேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.